முக்கியச் செய்திகள் தமிழகம்

‘தயவு செய்து தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்’ – ஆளுநர் ஆர்.என்.ரவி

‘தயவு செய்து தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இந்த நிகழ்வில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, செயலாளர் கார்த்திகேயன், ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்னர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மாநிலம் முழுவதும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது என தெரிவித்த அவர், சிறப்பான பல்கலைக்கழகமாக திறந்தநிலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது என குறிப்பிட்டார்.

அண்மைச் செய்தி: ‘‘திமுக ஆட்சி; பெண்களின் முன்னேற்றத்துக்கான ஆட்சி’ – தமிழ்நாடு முதலமைச்சர்’

மேலும், திருவள்ளுவர் இருக்கை, தந்தை பெரியார் இருக்கை, அண்ணா இருக்கை என்று சிறந்த முயற்சிகளை எடுத்துள்ளது என குறிப்பிட்டு பேசிய அவர், நம் கல்விக்கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது 70% அளவுக்கு பெண்களே உயர்கல்வி படிப்பவர்களாக இருக்கின்றனர் பெண்கள் அதிகளவில் உயர்கல்வி பயில, சமுதாய முன்னெடுப்புகள், மாற்றங்களே காரணம் தொடர்ந்து பேசிய அவர், பெண்கல்வியே நாட்டின் சொத்து. அவர்களே நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதாக குறிப்பிட்டார். மேலும், அண்ணாமலை பல்கலைக்கழக விவகாரத்தில் UGC-க்கு அறிவுறுத்த வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி கேட்டுக்கொண்டார்.

அவருக்கு நான் சொல்லவிரும்புவது, தயவு செய்து தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். மேலும், கல்வியை வேறு வடிவில் அணுகத் தயாராக வேண்டும். தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார். பல மாநிலங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் என்று இருப்பதே இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பதை காட்டுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவில் அனைவருக்கும் இயற்கையான சத்தான உணவுகள், சுகாதாரம், தரமான கல்வி, தடையில்லா மின்சாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், வன்முறை எதற்கும் தீர்வாகாது வன்முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கூறினார். மேலும், அனைவருக்கும் அரசால் வேலை தர முடியாது என தெரிவித்த அவர், படித்து முடிக்கும் இளைஞர்கள் தொழில்முனைவோராக மாற முயற்சிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிக ரன்கள்: மிதாலி ராஜ் அபார சாதனை

Gayathri Venkatesan

ஓராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாது உழைப்போம் – முதலமைச்சர்

Arivazhagan Chinnasamy

டி.என்.பி.எஸ்.சி; குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

Arivazhagan Chinnasamy