முக்கியச் செய்திகள் தமிழகம்

மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தனக்குத்தானே செய்துகொண்ட கொடுமை

மணப்பாறை அருகே தனது ஆணுறுப்பை தானே அறுத்துக்கொண்டு சிகிச்சையின்றி தவித்த மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவிய கிராம நிர்வாக அலுவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த T.துலுக்கம்பட்டி மேற்கு தெருவில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி முருகேசன்.இவருக்கு மனைவி குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவரது மனைவி தேன்மொழி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வீட்டில் இருந்த முருகேசன் பிளேடால் தனது ஆணுருப்பை அறுத்துக் கொண்டார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், தொழிலாளி முருகேசனை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் பண உதவியும் செய்தார். இதனையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement:
SHARE

Related posts

அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து திருட்டு!

Ezhilarasan

மாநாடு படக்குழுவினருக்கு பரிசளித்து மகிழ்வித்த நடிகர் சிலம்பரசன்!

Jeba Arul Robinson

மின் ஊழியர்களுக்கான புதிய காப்பீடு திட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு

Gayathri Venkatesan