திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை வழக்கில், அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் பிடிபட்டுள்ளான்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி சந்தைபேட்டையில் கணவரை இழந்து தனியாக வசித்து வந்த அப்துல்ரசாக் மனைவி ஹபிபாபீவி என்ற 62 வயது மூதாட்டி வெள்ளிக்கிழமை இரத்த வெள்ளத்தில் ஆடைகள் முற்றிலும் களைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அதனைதொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா, துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் தலைமையில் மோப்ப நாய் நிகழ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மோப்ப நாய் அதே பகுதியினை சுற்றிவந்து மூதாட்டியின் வீட்டின் அருகேயே நின்றுவிட்டது. இதனால் கொலையாளி அதே பகுதியினை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மூதாட்டி வீட்டின் அருகே வசித்து வரும் 16 வயது சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தன்னை மூதாட்டி அடிக்கடி திட்டுவதாகவும், இதனால் ஆத்திரமடைந்து வந்த நிலையில், சம்பவதன்று மூதாட்டியின் வீட்டின் கதவு திறந்து இருந்ததால் உள்ளே சென்றதாகவும், மூதாட்டியினை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுவன் தெரிவித்துள்ளார்.
பின் கழுத்தில் நைலான் கயிறு கட்டி இறுக்கி கொலை செய்து, கருங்கற்களை கொண்டு முகத்தை சிதைத்தாகவும் ஒப்புக்கொண்டான். மேலும் மூதாட்டியின் 3 சவரன் செயின் மற்றும் செல்போனை எடுத்து சென்றதாகவும் ஒப்புக்கொண்டான். இதனையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.