முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக ஆட்சியில் பத்திரப் பதிவில் முறைகேடுகள்: அமைச்சர் மூர்த்தி

அதிமுக ஆட்சியில் பத்திரப் பதிவுத் துறை என்பது ஊழல்துறையாக இருந்ததாக அமைச்சர் மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

 மதுரை புதூர் பகுதியில் 5 லட்ச ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  தமிழ்நாட்டில் பத்திரப் பதிவுத் துறை என்பது ஊழல்துறையாக இருந்தது என குற்றம்சாட்டினார்.  

அதனை தடுக்க 50 நாட்களில் பல்வேறு முயற்சிகளை செய்துவருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், “அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் ஆள்மாறாட்டம் நடைபெற்றது. போலியான பத்திரப் பதிவு போன்ற முறைகேடுகள் நடந்துள்ளன. அதன்மீது நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம் என்றும் கூறினார். 

50 நாட்கள் ஆட்சி என்பது மக்கள் விரும்பும் ஆட்சியாக உள்ளது எனவும், திமுக அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுவதாகவும், போலிப் பத்திரப் பதிவை தடுக்கும் வகையில்  பத்திர பதிவுத்துறையும் வெளிப்படையாக பதிவு செயல்பட்டுவருகிறது என்றும் கூறினார். 

Advertisement:

Related posts

கேரளாவில் ஒரே நாளில் 43,529 பேருக்கு கொரோனா!

Halley karthi

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்றார்!

Jayapriya

நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு – மநீம தேர்தல் அறிக்கை வெளியீடு

Gayathri Venkatesan