உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் நாட்டிலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு விடுத்துள்ளது. இந்த போட்டித்தேர்வு முறையை கைவிட்டு, பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த அறிவிப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் உடற்கல்வி பயிற்றுநர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், விளையாட்டு அனுபவம் மற்றும் உடல்திறன் சோதிக்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனத்தை மேற்கொள்ளமல், விளையாட்டு ஆசிரியர் பணிக்கும் போட்டித்தேர்வு நடத்த வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் முடிவு மிகவும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ள அவர்,
தமிழ்நாடு முழுவதும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 50 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட விளையாட்டு வீரர்கள் பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். அதோடு கடந்த 10 வருடமாக உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உடற்கல்வி பயிற்றுனர்களது ஆசிரியர் கனவை கானல் நீராக்கும் வகையில் திமுக அரசின் இந்த அறிவுப்பு சிறிதும் அறமற்ற செயலாகும் என தெரிவித்துள்ளார்.
ஆகவே உடற்கல்வி ஆசிரியர்களை பொறுத்தவரை எழுத்துத் தேர்வினை விடவும் விளையாட்டு அனுபவமே மிகமுக்கியம் என்பதால் தமிழ்நாடு அரசு போட்டித்தேர்வு முறை முடிவைக் கைவிட்டு, பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
– சத்யா விஸ்வநாதன், மாணவ ஊடகவியலாளர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







