“நாங்க இருக்கோம், மீண்டும் வருவோம்!” – இதுதான் உடன்பிறப்புகளின் குரல் : மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவு…!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இருவாரப் பயணமாக நாளை வெளிநாடு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” – இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.

நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.

உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன்.

அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.