முக்கியச் செய்திகள் தமிழகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவும், செயற்குழுவும் கே.பாலகிருஷ்ணனை ஒரு மனதாக தேர்வு செய்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற 22வது மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் முதன் முறையாக மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய பிரிவு செயலாளராகவும் பொறுப்பு வகித்த கே.பாலகிருஷ்ணன், கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். 69 வயதாகவும் கே.பாலகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்தி: ‘பூர்வ பவுத்தர்கள் என அறிவிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்’ – எம்.பி திருமாவளவன்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பாலகிருஷ்ணன், திமுக உடனான தற்போதைய கூட்டணி தொடரும் எனக் கூறினார். கூட்டணிக்கு புதிதாக யார் வந்தாலும் நன்மை தான் எனக் கூறிய கே.பாலகிருஷ்ணன், நீர் நிலை மற்றும் புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களை தமிழக அரசு அப்புறப்படுத்த கூடாது, எனவும் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு அதிகாரி கன்னத்தில் அறைந்த அதிமுக பிரமுகர் மகன்

Saravana Kumar

லாரி உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!

Gayathri Venkatesan

அடுத்த பெருந்தொற்றுக்கு நாம் தயாராக வேண்டும்..

Saravana Kumar