‘செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகம் மிகப் பெரிய வளர்ச்சியை அடையும்’ – விஸ்வநாதன் ஆனந்த்

தமிழகத்தில் நடைபெறவுள்ள உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகம் மிக பெரிய வளர்ச்சி அடையும் என சமிபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திய பிறகு செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன்…

தமிழகத்தில் நடைபெறவுள்ள உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகம் மிக பெரிய வளர்ச்சி அடையும் என சமிபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திய பிறகு செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

உலக செஸ் ஒலிம்பியாட் 2022 தமிழ்நாட்டில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இணைந்து 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் தொடரை வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த போட்டி ஜூலை 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு மிகப்பெரிய செஸ் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழக அரசால் மாமல்லபுரத்தில் நடத்தபடவுள்ளது. இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி உள்ள நிலையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில், மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சரை தமிழ்நாடு அரசு இல்லத்தில் இந்திய செஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அண்மைச் செய்தி: ‘பூர்வ பவுத்தர்கள் என அறிவிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்’ – எம்.பி திருமாவளவன்

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஸ்வநாதன் ஆனந்த், தமிழக முதலமைச்சரை சந்தித்தபோது செஸ் போட்டி மாமல்லபுரத்தில் எப்படி நடத்துவது என்பது தொடர்பான ஆலோசனை செய்ததாகவும் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக எந்த நாட்டின் வீரர்கள் பங்கேற்பார்கள் என இன்னும் தெரியவில்லை! இருப்பினும் 200 நாடுகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடர்பாக தமிழக அரசுடன் ஒரு மாத காலமாக செஸ் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தி வருவதாகவும் சர்வதேச வீரர்கள் தங்குவதற்கான ஹோட்டல் அறைகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவது மிக முக்கியமான நிகழ்வு என்றும் தமிழகம் செஸ் போட்டியில் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது என்பதை இந்த நிகழ்வு உணர்த்துவதாகவும், இந்தப் போட்டி தமிழகத்தில் நடைபெறுவதால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் எனவும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

  • பரசுராமன், மாணவ ஊடகவியலாளர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.