வயதான தோற்றத்தில் கார்த்தி. வைரலாகும் புகைப்படங்கள்

  கார்த்தி நடித்துள்ள படத்தின் போஸ்டர் ஒன்று லீக் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கார்த்தி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள விருமன்…

 

கார்த்தி நடித்துள்ள படத்தின் போஸ்டர் ஒன்று லீக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கார்த்தி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள விருமன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் இவர் இயக்கினர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.ஏழு வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் முத்தையா, நடிகர் கார்த்தி கூட்டணியில் கடந்த 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் “விருமன்” சூர்யாவின் 2டி எண்டெய்ன்மெண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு கார்த்தி, அதிதி சங்கர், சூரி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் முத்தையா, நடிகர் கார்த்தி கூட்டணியில் வெளியான “கொம்பன்” படம் போலவே கிராமத்துப் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியானது.

படம் வெளியாகிய முதல் நாளிலேயே 8 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம். மேலும் இப்படம் இதுவரை 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் கார்த்தி நடித்த படத்திலேயே ‘விருமன்’ படம் தான் அவருக்கு மிகப்பெரிய ஓப்பனிங்கை திரை ரசிகர்கள் மத்தில் ஏற்படுத்தி இருப்பதாகக் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

விருமன் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் இசிஆரில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில், நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, விருமன் திரைப்படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் தான் இவர் நடித்துள்ள சர்தார் படத்தின் போஸ்டர் ஒன்று லீக் இணையத்தில் வைரலாகி வருகிறது.ஏற்கனவே படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இணையத்தில் லீகான போஸ்டர் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பகிறப்பட்டுவருகிறது.

இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் கார்த்தி வயதான தோற்றத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.