பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு – பிரதமர் மோடி இரங்கல்…!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோ பகுதியில் இன்று அடுத்தடுத்து 3 முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இதனால் சரிந்து விழுந்தன. மேலும் இந்த நிலநடுக்கத்தால் 32 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பிலிப்பைன்ஸின் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் “பிலிப்பைன்ஸின் மிண்டனாவ் பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து மிகுந்த வருத்தம் அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். பிலிப்பைன்ஸ் மக்களுடனும் அந்நாட்டு அரசாங்கத்துடனும் இந்தியா துணை நிற்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.