ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள புதிய திரைப்படம் ‘பிளாஸ்ட்’. இப்படத்தை நடிகர் பிரதீப் ரங்கநாதன் அவர்களின் உதவி இயக்குனரான சுபாஷ் கே ராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.
மேலும் இப்படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி பசூர் இசையமைத்துள்ளார்.
காராத்தே தெரிந்த குடும்பம் ஒன்றிற்கும் ரவுடிகளுக்கும் இடையேயான நடைபெறும் ஆக்சன் தான் பிளாஸ்ட் படக்கதை.
விமர்சனரீதியாக நல்லவரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலிலும் கலக்கி வருகிறது. இந்த நிலையில் ‘பிளாஸ்ட்’ திரைப்படம் ரூ. 58 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.




