காதலர் தின ஸ்பெஷல் – சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிய மேயர்!

காதலர் தினத்தையொட்டி சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு பிலிப்பைன்ஸில் போனஸ் வழங்கப்பட்டது.  பிலிப்பைன்ஸ் நாட்டின் லூனா மாநகர் மேயராக மேட் ப்ளோரிடோ பதவி வகிக்கிறார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இவர்…

காதலர் தினத்தையொட்டி சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு பிலிப்பைன்ஸில் போனஸ் வழங்கப்பட்டது. 

பிலிப்பைன்ஸ் நாட்டின் லூனா மாநகர் மேயராக மேட் ப்ளோரிடோ பதவி வகிக்கிறார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இவர் தனது ஊழியர்களுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு போனஸ் வழங்கியுள்ளார்.

அதாவது கூடுதல் நேரம் வேலை பார்த்த சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு மூன்று நாள் ஊதியத்தை போனஸாக வழங்கினார். கடந்த 5 ஆண்டுகளாக சிங்கிளாக உள்ளவர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்பட்டுள்ளது. மற்ற ஊழியர்களுக்கு இரண்டு நாள் ஊதியத்தை போனஸாக வழங்கியுள்ளார்.

இது குறித்து மேயர் ப்ளோரிடோ கூறுகையில், சிங்கிளாக இருப்பவர்கள் காதலர் தினத்தன்று என்ன நினைப்பார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. காதலர் தினத்தன்று அவர்களுக்கு சாக்லேட், பூங்கொத்துகளை யாரும் கொடுக்கமாட்டார்கள். அதனால் அவர்களுக்காக இந்த திட்டத்தை செயல்படுத்தினோம். இதன் மூலம் நமக்காக யாரோ இருக்கிறார்கள் என்ற எண்ணம் தோன்றும்” என்று தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு இந்த காதலர் தின போனஸை ப்ளோரிடோ வழங்கி வருகிறார். இந்த ஆண்டு மொத்தமுள்ள 287 ஊழியர்களில் 37 ஊழியர்கள் இந்த போனஸை பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.