இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா கடந்த 12-ம் தேதி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு மாவட்ட தலைநகரங்களில் விழிப்புணர்வு பிரச்சார கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் 27ம் தேதியோடு இந்த கையெழுத்து இயக்கம் முடிவடைகிறது.
இந்நிலையில் போதைக்கு எதிராக 1 கோடி கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்து வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை இன்று சந்தித்து கையெழுத்துப் பெற்றனர்.
அண்மைச் செய்தி: காதலர் தின ஸ்பெஷல் – சிங்கிளாக இருக்கும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிய மேயர்!
சமுதாயத்தைச் சீரழிக்கும் போதை கலாச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பிற்கு கமல்ஹாசன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.







