பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்வு…அதிர்ச்சியில் மக்கள்!

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக சுற்றுலா மற்றும் ஏற்றுமதி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசு கடுமையான அந்நியச் செலாவணி சிக்கலில் தவித்து வருகிறது. இதுமட்டுமின்றி கச்சா…

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.

கொரோனா காரணமாக சுற்றுலா மற்றும் ஏற்றுமதி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசு கடுமையான அந்நியச் செலாவணி சிக்கலில் தவித்து வருகிறது. இதுமட்டுமின்றி கச்சா எண்ணெய் வாங்க முடியாத சூழல் உள்ளதால் கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டு அங்குள்ள பெட்ரோல், டீசல் நிலையங்களில், நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்திருப்பது வழக்கமாகி வருகின்றன.

இதனிடையே உக்ரைன் போர் எதிரொலியால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 130 டாலர்கள் வரை உயர்ந்துள்ளது. இதனால், இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை இலங்கை ஐ.ஓ.சி நிறுவனம் கடுமையாக உயர்த்தியது. அனைத்து ரக டீசல் விலையை ஒரு லிட்டருக்கு 75 ரூபாயும், அனைத்து ரக பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 50 ரூபாயும் அதிகரித்துள்ளது.தற்போது இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 254 ரூபாயாகவும், டீசல் 176 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. இலங்கையில், ஒரே தடவையில் பெட்ரோல், டீசல் விலையை இந்தளவிற்கு அதிகரிக்கப்பட்டது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.