28.6 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

மாநில வாரியாக பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா?

வரலாறு காணாத அளவில் உயர்ந்த பணவீக்கம், சாமானியர், நடுத்தர மக்களை மட்டுமல்லாமல் உயர் தர வகுப்பினரையும் கலங்க வைத்த விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்கள் கொந்தளிப்பில் இருந்தனர். பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்தது. மத்திய அரசுக்கு மட்டுமே,அதிக வருவாய் வரும்,நிலையில் அதிக வரி விதிப்பும் காரணமாக உள்ளது என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் மீது, 8 ரூபாய் 50 காசுகளும், டீசல் மீது 6 ரூபாய் , 70 காசுகள் அளவுக்கு கலால் வரியை குறைப்பதாக அறிவித்தார். இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்தது.

பணி நிமித்தமாகவோ அல்லது வேறு வேலையாகவோ அதிகமாக பயணம் செய்வோருக்கும், போக்குவரத்து தொழிலில் உள்ளவோருக்கும் பயனளிக்கும் வகையில் மாநில வாரியாக பெட்ரோல், டீசல் விலைகள் ,குறைக்கப்பட்ட விலை அளவுகளையும் காணலாம் ….

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாட்டில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 8 ரூபாய் 22 காசுகள் குறைந்து , 102 ரூபாய், 63 காசுகளூக்கும், டீசல் ஒரு லிட்டருக்கு , 6 ரூபாய் 70 காசுகள் குறைந்து, 94 ரூபாய், 24 காசுகளுக்கும், விற்பனை செய்யப்படுகிறது. அசாமில் பெட்ரோல் 9 ரூபாய் 65 காசுகள் குறைந்து , 96 ரூபாயாகவும், டீசல் 7 ரூபாய், 46 காசுகள் குறைந்து 83 ரூபாய் 46 காசுகளாககவும், ஆந்திராவில் மாற்றமின்றி பெட்ரோல் 120 ரூபாயாகவும், டீசல் 105 ரூபாய் 65 காசுகளாகவும் , பீகாரில் பெட்ரோல் 8 ரூபாய் 99 காசுகள் குறைந்து , 107 ரூபாய்,24 காசுகளாகவும் ,டீசல் ,7 ரூபாய் 0 காசுகள் குறைந்து, 94 ரூபாய், 04 காசுகளாகவும், சட்டீஸ்கரில் பெட்ரோல் 9ரூபாய் 2 காசுகள் குறைந்து , 102 ரூபாய், 45 காசுகளாகவும், டீசல் 7 ரூபாய் 42 காசுகள் குறைந்து, 95 ரூபாய், 44 காசுகளாகவும் உள்ளது.


குஜராத்தில் பெட்ரோல் 8 ரூபாய் 65 காசுகள் குறைந்து , 96 ரூபாய், 31 காசுகளாகவும், டீசல் 7 ரூபாய் 26 காசுகள் குறைந்து, 92 ரூபாய், 6 காசுகளாகாவும் , அரியானாவில் பெட்ரோல் 8 ரூபாய் 68 காசுகள் குறைந்து , 97 ரூபாய், 34 காசுகளாகவும், டீசல் 7 ரூபாய் 05 காசுகள் குறைந்து, 90 ரூபாய், 20 காசுகளாகவும் ,இமாச்சல் பிரதேசத்தில் பெட்ரோல் 8 ரூபாய் 54 காசுகள் குறைந்து , 97 ரூபாய், 29 காசுகளாகவும், டீசல் ,6 ரூபாய் 40 காசுகள் குறைந்து, 83 ரூபாய், 22 காசுகளாகவும் .ஜம்மு காஷ்மீரில் பெட்ரோல் 9 ரூபாய் 2 காசுகள் குறைந்து , 99 ரூபாய், 99 காசுகளாகவும் , டீசல் , 7 ரூபாய் குறைந்து, 85 ரூபாய், 4 காசுகளாகவும், ஜார்க்கண்டில் பெட்ரோல் 8 ரூபாய் 87 காசுகள் குறைந்து , 99 ரூபாய், 81 காசுகளாகவும் , டீசல் 7 ரூபாய் 37 காசுகள் குறைந்து, 94 ரூபாய் 61 காசுகளாகவும் , கர்நாடகாவில் பெட்ரோல் 9 ரூபாய் 15 காசுகள் குறைந்து , 101 ரூபாய், 51 காசுகளாகவும் , டீசல் 6 ரூபாய் 90 காசுகள் குறைந்து, 87 ரூபாய், 49 காசுகளாகவும் விற்பனையாகி வருகிறது.

கேரளாவில் பெட்ரோல் 9 ரூபாய் 48 காசுகள் குறைந்து , 105 ரூபாய், 89 காசுகளாகவும் , டீசல் 7 ரூபாய் 42 காசுகள் குறைந்து, 94 ரூபாய், 84 காசுகளாகவும், மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் 9 ரூபாய் 49 காசுகள் குறைந்து , 108 ரூபாய், 67 காசுகளாகவும் , டீசல் ,7 ரூபாய் 26 காசுகள் குறைந்து, 93 ரூபாய், 93 காசுகளாகவும்,மகாராஷ்டிராவில் பெட்ரோல் 9 ரூபாய் 38 காசுகள் குறைந்து , 109 ரூபாய், 24 காசுகளாகவும் , டீசல் ஒரு லிட்டருக்கு , 7 ரூபாய் 61 காசுகள் குறைந்து, 95 ரூபாய், 59 காசுகளாகவும், ஒடிசாவில் பெட்ரோல் 9 ரூபாய் 31 காசுகள் குறைந்து , 103 ரூபாய், 19 காசுகளாகவும் , டீசல் ஒரு லிட்டருக்கு , 7 ரூபாய் 48 காசுகள் குறைந்து, 94 ரூபாய், 76 காசுகளாகவும் ,பஞ்சாபில் பெட்ரோல் 8 ரூபாய் 46 காசுகள் குறைந்து , 96 ரூபாய், 50 காசுகளாகவும், டீசல் , 6 ரூபாய் 63 காசுகள் குறைந்து, 85 ரூபாய், 71 காசுகளாகவும் , ராஜஸ்தானில் பெட்ரோல் 9 ரூபாய் 55 காசுகள் குறைந்து , 108 ரூபாய், 48 காசுகளாகவும் , டீசல் , 7 ரூபாய் 20 காசுகள் குறைந்து, 93 ரூபாய், 72 காசுகளாகவும் உள்ளது.


தெலங்கானாவில் பெட்ரோல் 9 ரூபாய் 83 காசுகள் குறைந்து , 109 ரூபாய், 66 காசுகளாகவும் , டீசல் 7 ரூபாய் 67 காசுகள் குறைந்து, 97 ரூபாய், 82 காசுகளாகவும் , உத்தரபிரதேசத்தில் பெட்ரோல் 8 ரூபாய் 68 காசுகள் குறைந்து , 96 ரூபாய், 53 காசுகளாகவும், டீசல் 7 ரூபாய் 7 காசுகள் குறைந்து, 89 ரூபாய், 71 காசுகளாகவும், உத்தரகாண்டில் பெட்ரோல் 8 ரூபாய் 51 காசுகள் குறைந்து , 95 ரூபாய், 22 காசுகளாகவும் , டீசல், 7 ரூபாய் 8 காசுகள் குறைந்து, 90 ரூபாய், 26 காசுகளாகவும், மேற்கு வங்காளத்தில் பெட்ரோல் 9 ரூபாய் 9 காசுகள் குறைந்து , 106 ரூபாய், 3 காசுகளாகவும் , டீசல் 7 ரூபாய் 7 காசுகள் குறைந்து, 92 ரூபாய், 76 காசுகளாகவும் , புது டெல்லியில் பெட்ரோல் 8 ரூபாய் 69 காசுகள் குறைந்து , 96 ரூபாய், 72 காசுகளாகவும் ,டீசல் , 7 ரூபாய் 5 காசுகள் குறைந்து, 86 ரூபாய், 92 காசுகளாகவும் உள்ளது.

ரா.தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading