முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி

அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் கடந்த வாரம் டிசம்பர் 7ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை கடந்த 6ஆம் தேதி அறிவித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், அதிமுகவில் நடைபெற்ற இருந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை அங்கீகரிக்கக் கூடாது என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், உட்கட்சி தேர்தலில் தலையிட்டு கண்காணிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனவும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஏழைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்: ராகுல் காந்தி!

EZHILARASAN D

’சொன்னபடி முடி வெட்டலை’: பிரபல மாடலுக்கு ரூ.2 கோடி இழப்பீடு

EZHILARASAN D

ரூ.400 கோடி வசூலை எட்டியது ‘பொன்னியின் செல்வன்’

EZHILARASAN D