முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆளுநரை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை சந்திக்க இருக்கிறார்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி பொறுப்பேற்றார். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், மத்திய உளவுப்பிரிவின் சிறப்பு இயக்குனராக பணியாற்றியவர். 2019 ஆம் ஆண்டு முதல் நாகலாந்து ஆளுநராக இருந்து வந்த அவர், பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்ட பிறகு தமிழ்நாட்டு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அவரை தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை சந்திக்கிறார். ஆர்.என்.ரவி பதவியேற்ற பிறகு முதன்முறையாக சந்திக்க இருக்கிறார், எடப்பாடி பழனிசாமி. இந்த சந்திப்பு ஆளுநர் மாளிகையில் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது.

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மாநிலம் சார்ந்த முக்கிய கோரிக்கைகள் தொடர்பான மனுவையும் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

ஆளுநர் உரை ‘ட்ரெயிலர்தான்’: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி

Vandhana

முதல்வராகும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து!

ஹெலிகாப்டர் விபத்து; சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டவர் கைது

Arivazhagan CM