நாகப்பட்டினம் சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் ஒரே நேரத்தில் 1000 தீபம் ஏற்றப்பட்டு நடைபெற்ற சகஸ்ரதீப உற்சவ வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற 108 திவ்ய தேசங்களுள் 19- வது திவ்ய
தேசமாக விளங்கும் செளந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் ஐப்பசி மாத சகஸ்ரதீப உற்சவம் கடந்த 28ஆம் தேதி துவங்கியது.
நேற்று பெருமாள் சகஸ்ரதீப மண்டபத்தில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாளுக்கு ஒரே நேரத்தில் ஆயிரம் தீபம் ஏற்றி அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள்
கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ரூபி.காமராஜ்







