காயத்ரி ரகுராமின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு, அவரை அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்து நிரந்தரமாக விடுவிப்பதாக தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
நடிகையாகவும், நடன இயக்குநராகவும் பிரபலமடைந்தவர் காயத்ரி ரகுராம். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். அண்மையில் அண்ணாமலையின் தலைமையின் கீழ் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்பதலின்படி காயத்ரி ரகுராம் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக, பாஜக மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் லோகநாதன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காயத்ரி ரகுராமின் ராஜினாமாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்றுக்கொண்டதாகவும், அவரது ஒப்புதலின்படி காயத்ரி ரகுராமை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், காயத்ரி ரகுராமின் எதிர்கால முயற்சிகளும், பணிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.