139 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று, இதுவரை 24 மாநிலங்களில் ஓடி இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதிய COME LET’S RUN என்ற புத்தகம் வெளியீட்டு விழா, சென்னை புத்தக காட்சியில் நடைபெற்றது. புத்தகத்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று சொல்லக் கூடியவர்களுக்கு, உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து சாட்சியாக இந்த புத்தகம் இருக்கும் என்று கூறினார். 139 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று, இதுவரை 24 மாநிலங்களில் ஓடி இருப்பதாகவும் தெரிவித்த அவர், அந்த அனுபவங்கள் பற்றிய புத்தகத்தின் ஆங்கிலப் பதிவை தற்போது வெளியிட்டுள்ளதாக கூறினார்.
அவருக்குப் பின் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், அமைச்சர் மா.சுப்பிரமணியனின் புத்தகம் கண்டிப்பாக இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார்.







