மாஸ்டர் படம் வெளியாகி 2 வருடம் ஆனதால் அதைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் மாஸ்டர் படம் குறித்த பல பதிவுகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் மாஸ்டர். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. அனிருத் இசையமைப்பில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
இப்படம் 2021 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. கொரோனா காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட போதும், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
குறிப்பாகப் படம் வெளியாகி 2 வருடக்களை கடந்தும் விஜய்யின் JD கதாபாத்திரம் இன்றளவும் பேசுபொருளாக உள்ளது. விஜய்யின் மாறுபட்ட கதாபாத்திரமும் அவர் உடல் மொழியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பலரும் JD கதாபாத்திரத்தை தங்களுடன் ஒப்பிட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் இப்படம் வெளியாகி 2 வருடம் ஆனதால் அதைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் மாஸ்டர் படம் குறித்த பல பதிவுகளை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அத்துடன், மீண்டும் விஜய்- லோக்கேஷ் கூட்டணி இணைய இருப்பதால் ரசிகர்கள் இந்த கூட்டணியில் வெளிவர உள்ள படத்தை எதிர்நோக்கி மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.







