முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 12,428 பேருக்கு கொரோனா

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 12,428 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த நான்கைந்து நாட்களாக தொற்று ஏற்ற இறக்கமாக இருக்கிறது. இந்நிலையில் ஒரே நாளில் 12,428 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் மட்டும் 6,664 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 54 பேர் அம்மாநிலத்தில் தொற்றால் உயிரிழந்தனர்.

தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 15,951 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 3,35,83,318 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இப்போது 1,63,816 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 356 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,55,068 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை107.22 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் உலகளவில் தற்போது 20,55,33,195 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 49,54,916 பேர் தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா!

Jeba Arul Robinson

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

Halley karthi

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி; குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்றம்

Ezhilarasan