அடர்ந்த காடுகள் நிறைய இடங்களில் வாழும் பழங்குடி மக்களைத் தேடி தமிழக அரசின் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம்
தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை சார்பாக மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பயனாளிகள் இல்லங்களுக்குச் சென்று முக்கியமான மருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குதல் ,நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை செய்வதில் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருந்து சேவைகளின் பரிந்துரை போன்றவை இந்த சேவைகள் மூலம் வழங்கப்படுகிறது.
https://twitter.com/news7tamil/status/1550152474148761600
திட்டத்தின் பெயருக்கு ஏற்ப மக்களைத் தேடி இந்த திட்டம் சென்று சேர்கிறது என்பதற்கு உதாரணமாகக் கன்னியாகுமரியில், அடர்ந்த காடுகள் நிறைந்த இடங்களில் வாழும் பழங்குடி மக்களைத் தேடி மருத்துவக்குழு மருந்து மாத்திரைகளை வழங்கி வருகிறது.







