இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்வாகியுள்ள திரௌபதி முர்முவுக்கு தலைவர்கள் வாழ்த்து

இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்வாகியுள்ள திரௌபதி முர்முவுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்வாகியுள்ள திரௌபதி முர்முவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,…

இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்வாகியுள்ள திரௌபதி முர்முவுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்வாகியுள்ள திரௌபதி முர்முவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

https://twitter.com/news7tamil/status/1550140693925941248

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ‘இந்தியாவின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கு வாழ்த்துகள் எனவும், அரசியலமைப்பு ஜனநாயகத்தை உறுதிப்படுத்தத் துணை நிற்பீர்கள் என நம்புகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/news7tamil/status/1550141766015234049

இதேபோல, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், அதிமுக சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘தி லெஜண்ட்; ஜூலை 28-ல், 5 மொழிகளில் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது’

https://twitter.com/news7tamil/status/1550142287618797571

அண்மைச் செய்தி: ‘தி லெஜண்ட்; ஜூலை 28-ல், 5 மொழிகளில் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது’

யஷ்வந்த் சின்ஹா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,அரசியலமைப்பின் பாதுகாவலராக அவர் செயல்படுவார் என நம்புவதாகவும், திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

https://twitter.com/news7tamil/status/1550141243740434432

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டின் 15வது குடியரசுத் தலைவராகத் தேர்வாகியுள்ள திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

https://twitter.com/news7tamil/status/1550141110328373248

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டின் 15வது குடியரசுத் தலைவராகத் தேர்வாகியுள்ள திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

https://twitter.com/news7tamil/status/1550148305262239744

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.