சிவகங்கையில் பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு ஊருக்குள் வந்த அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து கிராம மக்கள் வரவேற்றனர்.
மானாமதுரை அடுத்த இடைகாட்டூருக்கு அரசு பேருந்து சேவை ஏற்பாடு செய்ய வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இடைகாட்டூருக்கு அரசு பேருந்து இயக்க உத்தரவிட்டார். இதன்படி, முதன்முறையாக தங்கள் ஊருக்குள் வந்த அரசு பேருந்துக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கிராம மக்கள் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது. முதன்முதலாக தங்கள் ஊருக்குள் அரசு பேருந்து சேவை இயக்கப்பட்டதை இனிப்புகள் வழங்கி கொண்டாடிய கிராம மக்கள், பேருந்தில் பயணம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.









