இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது. 3ஆம் அலையை எதிர்கொள்ள மத்திய – மாநில அரசுகள்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது. 3ஆம் அலையை எதிர்கொள்ள மத்திய – மாநில அரசுகள் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தயாராகி வருகின்றன. அதேபோல கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 3,24,24,234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 38,487 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 3,16,36,469 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கடந்த 152 நாட்களில் குறைந்த அளவாக தற்போது 3,53,398 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 403 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 4,34,367 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 52,23,612 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை 58,14,89,377ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.