திருத்தணி அருகே இரவில் திடீரென்று நடுவானில் தோன்றிய மிகப் பெரிய அதிசய வெள்ளை நிற வட்டத்தைப் பார்த்து பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மாலை முதல் இரவு வரை வானம் மேகமூட்டத்துடன் மழை வருவது போல இருந்த நிலையில், இரவு 10.30 மணிக்கு மேற்கு பகுதியில் திடீரென்று வானில் வெள்ளை நிற மிகப் பெரிய வட்டம் தோன்றியதால், அதன் அருகில் இருந்த நிலா கூட சிறியதாக இருந்தது. அதனை பொதுமக்கள் அச்சம் கலந்த அதிசயமாக பார்த்தனர்.
இந்நிகழ்வு ஏன் தோன்றியது? எதற்காக தோன்றியது? என்று பொதுமக்களுக்கு குழப்பம் எழுந்துள்ளதால், இது குறித்து வானிலை ஆராய்ச்சி சார்ந்த அதிகாரிகள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று திருத்தணி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் நள்ளிரவில் வானத்தில் தோன்றிய வௌ்ளை நிற வட்டம் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
— ரூபி.காமராஜ்







