கோபிசெட்டிபாளையம் அருகே ஒட்டர்கரட்டுப்பாளையம் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதில்,அந்த வழியாக வந்த கார் நீரில் அடித்து செல்லப்பட்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட குழி நிரம்பி மழை நீர் வெள்ளம் போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில், கோபிசெட்டிபாளையத்திலிருந்து நம்பியூர் செல்வதற்காக 3 இளைஞர்கள் காரில் ஒட்டர்கரட்டுப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது மழை நீர் தேங்கியிருந்த சாலையை காரில் கடக்க முயன்றனா். அப்போது மழை நீரில் கார்
அடித்துச் செல்லப்பட்டு பாலம் கட்டும் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில்
தள்ளப்பட்டது. இதில் காரில் பயணம் செய்த மூன்று இளைஞர்களும் காரை விட்டு உடனடியாக வெளியேறியதால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினா்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் கடத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டு பள்ளத்தில் கவிழ்ந்த காா் கிரேன் இயந்திரம் மூலம்
மீட்கப்பட்டது. மேலும் அந்த சாலையில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளின் நலன் கருதி அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வேறு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
—ரூபி.காமராஜ்