GOLD PRICE | இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.13,195-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்ப்பட்ட நிலையில், விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ரூ.13,195-க்கும் சவரன் ரூ.1,05,560-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.215-க்கும், ஒரு கிலோ ரூ.2.15 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.