காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்! களை கட்டிய விற்பனை

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், அதிகாலை முதலே மீன்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அன்று…

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், அதிகாலை முதலே மீன்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அன்று நள்ளிரவே மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

வழக்கமாக வாரவிடுமுறை நாட்களில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வாங்க அதிகளவிலான மீன்பிரியர்கள் குவிவார்கள். மீன்பிடி தடைகாலம் இருந்ததால் கடந்த 2 மாதமாக காசிமேடு மீன் சந்தை களை இழந்து காணப்பட்டது.


இந்த நிலையில், மீன் பிடி தடைகாலம் முடிந்து 2-வது வாரம் என்பதால், ஏராளமான விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று திரும்பின. இதன் எதிரொலியாக, பெரிய வகை மற்றும் சிறிய வகை மீன்களான வஞ்சிரம் திருக்கை பாறை மற்றும் வவ்வால்,ஷிலா, மத்தி, சங்கரா, காணங்கத்தை, நண்டு, எறால் , உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது.

சென்னை காசிமேடு மீன் துறைமுகத்தில், அதிகாலை முதலே மீன் பிரியர்களின் கூட்டம் கூட்டமாக வந்து மீன்களை வாங்க குவிந்தனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது. இரண்டு மாதத்திற்கு பிறகு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை களை கட்டியது. ஏல முறையில் விற்கப்படும் மீன்களை சுற்றுவட்டார பகுதியில் சில்லறை விலைக்கு விற்பனை செய்யும் மீனவ பெண்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு சில்லரை விலையில் விற்பனை செய்வதற்காக வாங்கிச் சென்றனர். பெரிய வகை மீன்களான வஞ்சிரம் 1300ரூபாய்க்கும், பாறை மற்றும் சங்கரா உள்ளிட்ட மீன்கள் 700 ரூபாய்க்கும், இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடித்து வரும் மீனவர்கள் 7 நாட்கள் கழித்து ஒரு சிலர் கரை திரும்பியதால் இன்று பெரிய வகை மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது. இந்த வாரம் மீன்களை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஏராளமான குளிர்சாதனம் செய்யப்பட்ட லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. பெரிவகை மீன்கள் வரத்தால், விற்பனை கலைக்கட்டிய நிலையில், விசைப்படு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மீன்களின் விலை நிலவரம்:

  • வஞ்சிரம்-1300
  • வவ்வால்-700
  • திறுக்கை-500
  • ஷிலா-500
  • சங்கரா, -600
  • மத்தி, 300
  • கவலை, 300
  • கானாங்கத்தை,300
  • நவரை, 200
  • தோல் பாறை, 500
  • இறால், 400
  • நண்டு, 200
  • நெத்திலி-200
  • கடுமா-200
  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.