இந்திய முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் 91 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மாபெரும் அரசியல் சக்தியாகத் திகழ்ந்தவர். சுதந்திர இந்தியாவின் ஏழாவது பிரதமராகப் பதவி வகித்தவர். தனது பிரதமர் பதவியையே விலையாக கொடுத்து பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவர். அதற்காக இட ஒதுக்கீட்டுப் போராளி என கொண்டாடப்பட்டவர். காங்கிரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டவர் என பல சிறப்புகளையும், பெருமைகளும் கொண்டவர்தான் வி.பி.சிங். இந்திய அரசியலில் தனித்தன்மை கொண்ட ஆளுமைகளுள் ஒருவரான இவர் 1931 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25- ஆம் தேதி அலகாபாத் நகரில் செல்வாக்கு மிக்க ஒரு அரச குடும்பத்தில் ராம்கோபால் சிங் – ராதாகுமாரி தம்பதியருக்கு 2வது மகனாக பிறந்தவர். இன்று இவரின் 91 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
வி.பி.சிங் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டரில் பக்கத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த புரட்சித் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர் சமூக நீதிக்காக அச்சமின்றி போராடினார். இடஒதுக்கீடு நமது உரிமை என்பதை வலியுறுத்த அனைவரையும் தைரியப்படுத்தினார்.
வி.பி.சிங்கின் மரபு, நமது தலைவர் தலைவர் கலைஞர் அவர்களின் ஆன்மாவுடன் பின்னிப் பிணைந்துள்ளது. ஏனெனில் அவர்கள் இருவரும் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்ற பொதுவான இலக்கைப் கொண்டிருந்தனர். அவரது எண்ணங்கள் ஒளிமயமான மற்றும் சமமான எதிர்காலத்தை நோக்கி நம்மை தொடர்ந்து வழிநடத்தட்டும்” என தெரிவித்துள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1672822838737375232?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








