கன்னியாகுமரி மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவித்து வரும் குடும்பங்களை, தற்காலிக முகாம்களில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் முயற்சிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அன்மையில் பெய்த கன மழையால் கன்னியாகுமரி மாவட்டம் கடும் வெள்ள பாதிப்புக்குள்ளானது. இதனால், வீடுகளை இழந்த மக்களை காட்டாந்துறையிலுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 6 நாட்கள் கடந்த நிலையில் வெள்ளம் வடிந்த பகுதிகளுக்கு மக்கள் வீடுதிரும்பி வருகின்றனர். இந்நிலையில் வீடுகளை இழந்த மக்களையும் அதிகாரிகள் வெளியேற்ற முயற்சி மேற்கொண்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் உணவு ஏதும் வழங்கவில்லை எனவும், எங்குச் செல்வது எனத் தெரியாமல் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுடன் தவித்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.