முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நான்காவது முறையாக நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், மழை வெள்ளப்பாதிப்பு, நிவாரண நிதி அறிவிப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ள பாதிப்பு நடவடிக்கையின் போது அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.








