“இனி மின் விநியோக நிறுவனங்களை மக்களே தேர்ந்தெடுக்கலாம்”: மத்திய அமைச்சர்

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை போல இனி மின்சாரத்தை விநியோகிக்கும் நிறுவனத்தையும் மக்கள் சுயமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையை நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை போல இனி மின்சாரத்தை விநியோகிக்கும் நிறுவனத்தையும் மக்கள் சுயமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையை நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். இதன் மூலம் நுகர்வோர்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தேவையான நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், “தற்போது குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஒரேயொரு நிறுவனம் மட்டுமே மின் விநியோகத்தினை வழங்கி வருகின்றது. இந்த நிலை இனி மாறி, ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த சேவையில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.” என்றும்,

“சேவைகளை சரிவர வழங்காத நிறுவனங்களை மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப இனி மாற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொபைல் நெட்வொர்க் சேவைகளை போல இனி மின் விநியோகம் இருக்கும்.” என சிங் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து,

“இது ரூ.3,05,984 கோடி மதிப்புள்ள மின்சார விநியோக மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகவும், மின் விநியோக ஏகபோகத்தினை கட்டுப்படுத்தவும், நட்டத்தினை குறைக்கவும் இம்மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இவை செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் பல மத்திய அமைச்சர்களுடன் விவாதிக்கப்படும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

மின் விநியோகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விநியோகர்களை அனுமதிப்பதன் மூலம், போட்டியை உருவாக்கி தரமான சேவையை மக்களுக்கு வழங்க இந்த மாற்றங்கள் பயன்படும் என நிர்மலா சீதாராமன் முன்னதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply