இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் poco M3 மொபைல் அறிமுகம்..

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் poco M3 மொபைல் இன்று அறிமுகமானது. இந்திய மொபைல் சந்தையில் ரெட்மி, ரியல்மி, போக்கோ, விவோ உள்ளிட்ட சீன மொபைல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனால் ஏற்பட்டிருக்கும் தொழில்போட்டியை சமாளிக்க…

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் poco M3 மொபைல் இன்று அறிமுகமானது.

இந்திய மொபைல் சந்தையில் ரெட்மி, ரியல்மி, போக்கோ, விவோ உள்ளிட்ட சீன மொபைல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதனால் ஏற்பட்டிருக்கும் தொழில்போட்டியை சமாளிக்க அனைத்து மொபைல் போன் நிறுவனங்களும் குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மொபைல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், poco நிறுவனம் தனது M3 மாடல் மொபைலை இந்திய சந்தையில் இன்று அறிமுகம் செய்துள்ளது. இதன் கேமராவை பொறுத்த வரை பின்புறம் 3 கேமராக்களை கொண்டுள்ளது. மேலும், இதில், 2 சிம் ஸ்லாட்டுடன் பிரத்யோகமாக மெமரி கார்ட் ஸ்லாட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் 128 ஜிபி கொண்ட இருவேறு வேரியன்ட்களில் வெளியாகியுள்ளது. இந்த மொபைலானது வரும் 9ம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.

சிறப்பம்சங்கள்

இரட்டை சிம் (நானோ),
ஆண்ட்ராய்டு 10 இல் MIUI 12
6.53 அங்குல FULL HD + (1,080×2,340 பிக்சல்கள்)
டிஸ்ப்ளே 19.5:9 அதனுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC
6 ஜிபி ரேம்
6000 Mah பேட்டரி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply