இராமநாதபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசித்து வரும் குருவிக்காரர் சமூக
குழந்தைகளுக்கு சாதிச்சான்று வழங்கக்கோரி – வருவாய் கோட்டாட்சியர்
அலுவலகத்தில் குருவிக்காரர் சமூக மக்கள் முற்றுகை .
ராமநாதபுரம் மாவட்டம் , முழுவதும் சுமார் 10,000 மேற்பட்ட குருவிக்கார்கள் வசித்து
வருகின்றனர் . இவர்களின் குழந்தைகள் 12 ஆம் வகுப்பு செல்லும்பொழுது
முழுமையான ஜாதி சான்றிதழ் இல்லாததால் , இவர்களின் மேல் படிப்பு
பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி வேலை வாய்ப்புகளில் வாய்ப்பு இல்லாமல் உள்ளது,
பல ஆண்டு காலமாக ஜாதி சான்றிதழ் கேட்டு போராடி வருகின்றனர் .
இந்நிலையில், இராமநாதபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், வசித்து வரும் குருவிக்காரர்
சமூக குழந்தைகளுக்கு சாதிச்சான்று வழங்கக்கோரி , அச்சமூக மக்கள் வருவாய்
கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் , அதன் பின்பு வருவான
கோட்டாட்சியர் கோபு அவர்களுடன் , நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார் .
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர், தமிழக அரசுக்கு தங்களின் கோரிக்கையை தெரிவித்து , மாவட்ட நிர்வாகம் மூலம்
சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து ,
தற்காலிகமாக முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், ஜாதி சான்றிதழ்,
இருப்பிட சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் ஆகியவை இல்லாமல், இவர்களுடைய
வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென, வருவாய் கோட்டாட்சியர் கோபு தெரிவித்தார் .
கு.பாலமுருகன்