சென்னை பட்டாளம் பகுதிகளில் ஐந்து நாட்களாக மழை நீர் வெளியேற்றப்படாமல் உள்ளதால் விசைப் படகுகள் மூலமாக மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இரவு நேரம் மற்றும் காலையில் விட்டு விட்டு பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீரானது குளம்போல தேங்கியுள்ளது. தொடர்ந்து, தன்னார்வலர்களால் விசைப் படகுகள் மூலமாக பொதுமக்களை மீட்டு வருகின்றனர். உடனடியாக உணவு வழங்க வேண்டும் என்றும், மருத்துவ முகாம் அமைக்க கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 நாட்களாக மழை நீர் வெளியேற்றப்படாததால், குளம்போல் தேங்கி நிற்கிறது. மின் இணைப்பு துண்டிப்பால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.







