முக்கியச் செய்திகள் மழை

கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 4வது நாளாக ஆய்வு

கொட்டும் மழையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4வது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார்.

3 நாட்கள் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், நான்காவது நாளான இன்று, எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழை, வெள்ள பாதிப்பு குறித்த மக்களின் குறைகளை, தொலைபேசி வாயிலாக கேட்டறிந்து, பதிலளித்தார்.

இதையடுத்து சென்னை மேற்கு மாம்பலத்தில், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில், கொட்டும் மழையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

Advertisement:
SHARE

Related posts

கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற சிஎஸ்கே

Ezhilarasan

வங்கி ஏடிஎம்மில் நூதன முறையில் பணம் திருடிய ஊழியர் கைது!

Jeba Arul Robinson

உழவர் சந்தைகள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Gayathri Venkatesan