முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

மூதாட்டியிடம் திருடிய இளைஞரை அடித்துக்கொன்ற ஊர்மக்கள்

திருத்தணி அருகே மூதாட்டியை தாக்கி நகை பறிக்க முயன்ற நபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து ஊர்மக்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட திருவாலங்காடு ஒன்றிய பகுதியைச் சேர்ந்த தொழுதாவூர் கிராமத்தில் வசிப்பவர் அருள்முருகன் இவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள நபராவார். இவர் இதே ஊரில் பஞ்சாயத்து தலைவராகவும் உள்ளார். இவரது தாய் சரஸ்வதி வயது(70) இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர் இவரிடம் இருந்த தங்கச்சங்கிலியை மற்றும் தங்க நகையை பறிக்க முயற்சி செய்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது அந்த மூதாட்டி கூச்சல் போடவும், இவரிடமிருந்து தங்கச் சங்கிலியை பறிக்க வந்த மர்ம நபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். பின்னர், அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து ஊர்மக்கள் சரமாரியாக தாக்கியதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே மயங்கி உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து திருவலாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மர்ம நபரின் உடலை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அந்த மர்ம நபர் தாக்கியதில் படுகாயம் அடைந்த மூதாட்டி சரஸ்வதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் திருத்தணி உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் இப்படி ஒரு விபரீத சம்பவம் நடைபெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொங்கல் பரிசு: ரொக்கமாக பணம் வழங்க தமிழக அரசு ஆலோசனை

G SaravanaKumar

IPL2022: பந்து வீச்சில் அசத்தி லக்னோவை சுருட்டியது பெங்களூரு

G SaravanaKumar

தமிழ்நாட்டில் புதிதாக 1,612 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

G SaravanaKumar