எடப்பாடி அருகே பணம் வைத்து சீட்டு விளையாடிய 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி கீழ்முகம் கிராமத்தில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சீட்டு கட்டு சூதாட்டம் நடத்தி வருவதாக எடப்பாடி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அப்பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2,96,690 ரூபாய் ரொக்கப்பணம் , 10 செல்போன்கள், 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







