முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து 3 நாள் போராட்டம்: கம்யூனிஸ்ட் கட்சிகள்,விசிக அழைப்பு

பெட்ரோல் விலை குறைப்பு உள்ளிட்ட 8கோரிக்கைகளை முன் வைத்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை 28ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளன.

இது குறித்து அந்த கட்சிகள் கூட்டாக விடுதுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
“பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை கட்டுப்படுத்தி, 2014 முதல் உயர்த்தப்பட்ட கலால் வரிகளை பெருமளவு குறைத்து, விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு மருத்துகள் உட்பட உயிர் காக்கும் மருந்துகளின் கள்ள வணிகத்தை தடுத்து, நியாய விலையில் மக்களுக்கு மருந்துகள் தட்டுபாடின்றி கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோ டெக் தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தை தமிழ்நாடு அரசிடம் தாமதமின்றி வழங்க வேண்டும்.தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப, போதுமான தடுப்பூசி மருந்துகளும், பேரிடர் கால நிவாரண நிதியும் வழங்க வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழில் முடக்கம், வேலையிழப்பு. வேலையின்மை மற்றும் வருமானத்திற்கு வழியில்லாத காரணங்களால் வாழ்வாதரம் இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் 7500/- வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டும்.

மத்திய உணவுத் தொகுப்பில் இருந்து நபருக்கு தலா 10 கிலோ வீதம் உணவு தானியங்கள் விலையில்லாமல் வழங்க வேண்டும். கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒருங்கிணைந்து, மக்கள் உணர்வை பிரதிபலித்து நடத்தும் ஆர்பாட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று, ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை கோரிக்கை விடுத்துள்ளன.

Advertisement:

Related posts

கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய கனிமொழி!

Niruban Chakkaaravarthi

அதிநவீன CMS -01 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்.. சிறப்பம்சங்கள் என்ன?

Saravana

அனைத்து மாவட்டங்களிலும் எதெற்கெல்லாம் தடை?

Jeba Arul Robinson