ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் நிறைவு – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்றும், அமெரிக்க கடற்படை முற்றுகை உடனடியாக நீக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தச் சிறப்பான ஒப்பந்தம் இப்பகுதி முழுமைக்கும் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டுவரும். ஈரானுடன் அமைதியை ஏற்படுத்தப் பல அதிபர்கள் முயன்றுள்ளனர். ஆனால் எனக்கு முன்னால் இருந்த அனைவரும் அதில் தோல்வியடைந்தனர். உண்மையான அமைதியை அடையத் தங்களுக்கு உதவக்கூடிய ஒரு அதிபரை இப்பகுதித் தலைவர்கள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று ஒப்பந்தம் கையெழுத்தாவதைத் தொடர்ந்து, கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக அந்த ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்போது, எண்ணெய் விநியோகம் நடைபெறும். ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை முற்றுகை உடனடியாக அகற்றப்படும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.