பழனி கோவில் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் தங்களுக்குரிய இட ஒதுக்கீட்டை அளிக்கக் கோரி 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்.தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இக்கோவில் நிர்வாகத்தில் காலியாக உள்ள தட்டச்சர், சமையலர், அலுவலக உதவியாளர், கூர்கா உள்ளிட்ட பல்வேறு காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானை கடந்த மார்ச் 1ம் தேதி வெளியிடப்பட்டது.மொத்தமாக 281 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இவ்வறிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழக அரசு வழங்கும் இட ஒதுக்கீடு அளிக்கவில்லை எனக்கூறி,எனவே தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம அளிக்க வேண்டும் எனக்கூறி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமை பாதுகாப்போர் சங்கம் சார்பில் பழனி கீரிவீதியில் உள்ள கோவில் அலுவலகத்தின் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சங்க மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு 5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க கோரி கோஷங்களை எழுப்பினர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-வேந்தன்