நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழியேற்பு!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை மார்ச் முழுவதும் நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, சிவகங்கை மற்றும் சங்கரன்கோவிலில் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது. சர்வதேச…

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை மார்ச் முழுவதும் நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, சிவகங்கை மற்றும் சங்கரன்கோவிலில் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மெளண்ட் லிட்ரா ஜீ மேல்நிலைப்பள்ளி:

அந்த வகையில், சிவகங்கையை அடுத்த குமாரபட்டி கிராமத்தில் உள்ள மெளண்ட் லிட்ரா ஜீ மேல்நிலைப்பள்ளியில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி செயலர் பாலகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று கையெழுத்திட்டனர்.

ஏ.வி.கே இன்டர்நேஷனல் ரெசிடன்ஷியல் பள்ளி:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஏ.வி.கே இன்டர்நேஷனல் ரெசிடன்ஷியல் பள்ளியில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி முதல்வர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள், பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கையெழுத்திட்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.