பட்டுக்கோட்டை: பொதுஆவுடையார் திருக்கோயிலில் 2-வது வார சோமவார விழா – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

பரக்கலக்கோட்டை  பொது ஆவுடையார் கோயிலில் இரண்டாவது வாரம் சோமவாரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பரக்கலக்கோட்டை  பொதுஆவுடையார் மத்தியபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயில்…

பரக்கலக்கோட்டை  பொது ஆவுடையார் கோயிலில் இரண்டாவது வாரம் சோமவாரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பரக்கலக்கோட்டை  பொதுஆவுடையார் மத்தியபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயில்
அறநிலையத்துறைக்கு சொந்தமாக உள்ளது. இந்தக் கோயிலின் சிறப்பம்சம் வாரத்தில் திங்கள்கிழமை மட்டும் இரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு அதிகாலையில் மூடப்படும்.

இதையும் படியுங்கள் : “கலைஞர் நூற்றாண்டு விழா” தேதியை மாற்ற வேண்டும்: திரைப்படத் துறையினருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

மேலும், பொங்கல் திருநாள் மட்டும் பகலில் கதவு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திங்கள் கிழமைகளில் சோமவார வெகு சிறப்பாக நடைபெறும். மற்ற நாட்களில் கோயில் திறக்கப்படாது .

 இந்த நிலையில் நேற்று (நவ.27) கார்த்திகை இரண்டாவது திங்கள் கிழமை சோமவாரம் என்பதால் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மற்றும் பல மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.