ஷூட்டிங்கில் காயமடைந்த சூர்யா – ஓய்வெடுக்க மும்பை பயணம்…

கங்குவா திரைப்படத்தில் நடித்தபோது காயம் ஏற்பட்ட நிலையில், ஓய்வெடுப்பதற்காக நடிகர் சூர்யா மும்பை சென்றார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கங்குவா திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகிக்…

கங்குவா திரைப்படத்தில் நடித்தபோது காயம் ஏற்பட்ட நிலையில், ஓய்வெடுப்பதற்காக நடிகர் சூர்யா மும்பை சென்றார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கங்குவா திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கின்றது. விஜயிற்கு நிகராக தமிழ் சினிமாவில் ரசிகர்களை சூர்யாவும் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் சூர்யாவிற்கு சண்டைக் காட்சியின் போது கேமரா அறுந்து தோள்பட்டையில் விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அங்கிருந்த படக்குழுவினர் சூர்யாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சூர்யாவிற்கு உடம்பு சரியாகும் வரை சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

காயம் ஏற்பட்ட நிலையில், ஓய்வெடுப்பதற்காக நடிகர் சூர்யா மும்பை சென்றார். மருத்துவர்களின் அறிவுரையின்படி, சுமார் 2 வாரங்கள் அவர் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓய்வுக்கு பின் சூர்யா மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.