புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம், சட்டப்பேரவை அருகேயுள்ள அரசு பொது மருத்துமனையில் நோயாளிகளுக்கு முறையான படுக்கை வசதி இல்லாததால் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதன் காரணம் குறித்து கேட்டறிந்தபோது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் உள்ளிட்டவர்களின் பற்றாக்குறையாலும், மருந்து மாத்திரைகளின் பற்றாக்குறையாலும், மருத்துவ வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக சிகிச்சை பெறும் நோயாளிகள் தெரிவித்தனர். இதற்கு முன்னதாக கடந்த வருடம் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அவசர சிகிச்சை பிரிவிற்கு அரைநாள் விடுமறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி பழுதாகி ஒரு வருடம் கடந்தும் சரிசெய்யாத நிலையில் உள்ளதால் ஏழை நோயாளிகள் 7000 ரூபாய் வரை கொடுத்து வெளியே ஸ்கேன் எடுத்து வருகின்றனர். அரசு மருத்துவமனையை நாடி வரும் எளியோருக்கு முறையான சிகிச்சை அளிக்கும்படி பொதுமக்கள் புதுச்சேரி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனகா காளமேகன்






