பிரதமர் மோடியின் பயணத்தை முன்னிட்டு அமெரிக்கா உணவகம் ஒன்று அறிமுகம் செய்துள்ள உணவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர ஜூன் 21 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வாஷிங்டன் நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் மோடி, இருதரப்பு உறவு உள்ளிட்டவை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு பைடன் விருந்தளிக்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையை கொண்டாடும் விதமாக நியூ செர்சியில் உள்ள உணவகம் ஒன்று சிறப்பு உணவை அறிமுகம் செய்துள்ளது. ஸ்ரீபத் குல்கர்னி என்பவர் ரெஸ்ட்ராரெண்டில் அமெரிக்க வாழ்இந்தியர்களுக்கு பிரத்யேக உணவு பரிமாறப்படுகிறது.
கிச்சடி, ரசகுல்லா, இட்லி, காஷ்மீர் டம், ஆலு உள்ளிட்ட நாக்கில் எச்சில் ஊற வைக்கும் உணவு வகைகள் அந்த மெனுவில் உள்ளது. உணவு மிகவும் சுவையாக உள்ளதாக பல வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அதன் விலை குறித்த விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இந்த உணவு குறித்து வீடியோவை ஸ்ரீபத் குல்கர்னி இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த உணவை ருசிக்க ஆசைதான், ஆனால் அமெரிக்கா செல்ல வேண்டுமே என சப்ஸ்கிரைபர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐயா குல்கர்னி இந்தியாவுக்கு ஒரு பார்சல் அனுப்ப முடியுமா என மற்றொருவர் குறும்பாக கேட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் டெல்லியில் உள்ள ஆர்தர் 2.1 என்ற உணவகம் 56 வகைகளுடன் சிறப்பு சைவம் மற்றும் அசைவ உணவை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.






