காதர் மொகிதீன் மகன் மறைவு – அன்புமணி இரங்கல்!

காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் மகன் டாக்டர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

டாக்டர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மானை இழந்து வாடும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், முஸ்லீம் லீக் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.