பெரு நாட்டின் தெற்கு பகுதியில் சுற்றுலா பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மதியம் நாஸ்கா நகரில் இருந்து 6 கி.மீ தொலைவிலும், உலகப் புகழ்பெற்ற நாஸ்கோ கோடுகள்(Nazca Lines) அமைந்துள்ள இடத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள புவெப்லோ வியெஜோ(Pueblo Viejo) என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த சுற்றுலா பயணிகள் 11 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விமான விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




